Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

“5 பேருக்கு தூக்கு” – பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு.

அமெரிக்காவில் வெளிவரும் “வாஹிங்டன் போஸ்ட்” என்ற பத்திரிக்கையில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு எதிராக கட்டுரைகள் எழுதி வந்தார் பிரபல பத்திரிகையாளரான ஜமால் கசோகி. சவுதியில் பிறந்தவரான அவர் கடந்த அக்டோபரில் துருக்கியில் அமைந்துள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்கு, விவாகரத்து தொடர்பான ஆவணங்களில் ஒப்புதல் வாங்க சென்றிருந்தார்.

அவர் திரும்பி வராத நிலையில், கொலை செய்யப்பட்டு உடல் பாகங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இளவரசர் முகமது பின் சல்மானின் தூண்டுதலில் இந்த கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில் நேற்று, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள நீதி மன்றத்தில் கசோகி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கபட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையும், மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. சவுதி அரசக்குடும்பத்துக்கு  நெருக்கமான இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது, போதிய ஆவணங்கள் இல்லை என அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தண்டனை விதிக்கப்பட்டோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. 

Exit mobile version