தங்கம் விலைக்கு விற்பனையாகும் மல்லிகைப்பூ!! ஒரு கிலோ விலை ரூ.7500!!

0
107
Jasmine is sold at the price of gold!! Price per kg is Rs.7500!!

தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில தினங்களால் பொய்த்த கனமழை காரணமாக சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூ வரத்து மிக குறைவாக வந்தது.  இந்த பூ வரத்து குறைந்த  நிலையில் வந்ததால் மல்லிகை பூ கடும் தட்டுப்பட்டு ஏற்பட்டது. இந்த கடும் தட்டுபாட்டு சரி செய்ய சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.7500 விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் கன்னியாகுமரி தோளாலை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.4000 விற்பனை செய்யப்பட்டது. இதற்க்கு மற்றொரு காரணம் நாளை தான் இந்த வருடத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் மல்லிகை பூ இந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை ஏற்றத்தால் விவசாய்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மாதிரி விலை விற்பனை செய்யப்பட்டது இது தான் முதல் முறை என்று அங்கு இருந்த வியாபாரிகள் கூறினார்.