ஜவான் வீழ மாட்டான்.. ரூ.1000 கோடியை தட்டி தூக்குவது உறுதி! வெளியான தகவல்!

0
100
#image_title

ஜவான் வீழ மாட்டான்.. ரூ.1000 கோடியை தட்டி தூக்குவது உறுதி! வெளியான தகவல்!

இளம் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 7 ஆம் தேதி வெளியான படம் ஜவான்.இப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி,யோகி பாபு,தீபிகா படுகோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.

முதல் நாளில் 130 கோடி வசூல் செய்த இப்படம் அடுத்தடுத்த நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.வெளியாகிய 5 நாட்களில் இப்படம் 600 கோடி வரை வசூல் செய்த நிலையில் அடுத்த 6,7 ஆகிய நாட்களில் எதிர்பார்த்த வசூலை இப்படம் பெறவில்லை சற்று சரிவை சந்தித்தது.இதனால் 1000 கோடியை தொட்டு விடும் என்ற ஷாருக்கானின் கனவு நிறைவேறாது என்று அனைவரும் தெரிவித்து வந்தனர்.ஆனால் தற்பொழுது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியான நிலையில், செப்டம்பர் 13 ஆம் தேதி வரை ஒட்டு மொத்தமாக 660 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதனால் பாக்ஸ் ஆபீஸின் கிங் என்பதை ஷாருக்கான் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.இதன் மூலம் விரைவில் 1000 கோடியை எட்டும் என்று ஷாருக்கானின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் தெரிவித்து வருகின்றனர்.