Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எடப்பாடி சசிகலாவிற்கு பூங்குன்றன் மறைமுக அறிவுரை!

சசிகலா குறித்த விவகாரத்தில் அதிமுகவில் பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் ஆதரவாளர்களிடையே மாறி ,மாறி கருத்து வேறுபாடு ஏற்பட்டுக்கொண்டே இருக்கும் சூழ்நிலையில் நீங்கள் இப்படி உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது நாம் எதிரிகளுக்கு பாதையை அமைத்துக் கொடுத்துவிடும் என்பதில் சந்தேகமில்லை என்று ஜெயலலிதாவின் தனி உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றன் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவு ஒன்றில், தானாக முன்வந்து பிறருக்காகவும் அல்லது இறைவனுக்கு எதையும் எதிர்பார்க்காமல் சேவை செய்வதற்கு பெயர் தான் தொண்டு, அப்படி எதையும் எதிர்பார்க்காமல் உழைப்பவனுக்கு பெயர்தான் தொண்டன். எதிர்பார்ப்பு இல்லாதவரால் மட்டுமே நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க இயலும். தமிழர்களாகிய நீங்கள் நல்ல தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ளும் சமயத்தில் தான் உங்களால் நல்ல தலைவனை உருவாக்க முடியும் இப்படி இயக்கத்தின் ஆணிவேராக இருக்கும் தொண்டர்கள் தங்களுடைய பெருமையை சொல்வதற்கு காத்திருக்கிறார்கள்.

தொண்டன் என்பவன் முகத்திற்காக அல்லாமல் கொள்கைகளுக்காக தன்னுடைய தலைமையில் தேர்ந்து எடுக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த தலைமை கழகத்தின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டால் அந்த தலைமைக்கு ஆதரவாக பேசுவதை நிறுத்திவிட்டு அவர் செய்தது தவறு என்று தெரிந்தால் அதனை எதிர்த்து தன்னுடைய கருத்தை துணிவுடன் சொல்ல வேண்டும். தலைமை நிர்வாகியும் தவறு செய்திருந்தால் கொள்கைகளால் மட்டுமே எதிர்த்து நிற்க வேண்டுமே ஒழிய அதை தவிர்த்து அவர்களின் கடந்தகால கழகப் பணிகளை எல்லாம் மறந்து வசாய் வசைபாடக்கூடாது என்பதுதான் அழகு என தெரிவித்து இருக்கிறார்.

எப்போதுமே பதவியின் மீது மோகம் கொள்ளாமல் பணத்தின் மீது ஆசை கொள்ளாமல் சிறந்த தொண்டனாக பணிபுரிய ஒவ்வொருவரும் முன்னேற்ற வேண்டும் நம்மைவிட இயக்கமே பெரிது கடந்த கால சமயங்களில் தொண்டர்கள் தங்கள் பின்பற்றும் தலைவர்களை விடும் அதிகம் தெரிந்தவர்களாக இருந்தார்கள் தங்களுடைய நெஞ்சில் வைத்து பூஜித்து நேசித்த தலைவர்கள் கொள்கையில் இருந்து பின்வாங்கும் போது அவர்களை துணிவுடன் கேள்வி கேட்டு அவர்களை சிறப்பாக செயல்பட வைத்தார்கள் இருந்தாலும் தற்போது தலைவர்கள் உங்களை தொடர்களாக மதித்து வருகிறார்களா? என்றால் இல்லை நீங்கள் தான் அவர்களுக்கு அறிவுரை கூறி வழி நடத்துகிறீர்கள் அவர்கள் மூலதனமாக உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று தோன்றுகிறது என பதிவிட்டு இருக்கிறார்.

ஆகவே தொண்டர்களே நீங்கள் யானை என்பதை நினைவில் கொள்ளுங்கள் யானைக்கு தன பலம் தெரியாது என்பதைப் போல தாங்களும் இருக்கிறீர்கள் அப்படியே இருந்து விடாதீர்கள் உங்களை நம்பி கழகம் இருக்கிறது இது உங்கள் குடும்பம் குடும்பம் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காதீர்கள், தற்சமயம் நீங்கள் செய்து கொண்டிருக்கும் காரியத்திற்கும் யானை தன் மேல் மண்ணை அள்ளி போட்டுக் கொள்ளும் செயலுக்கும், எந்த விதமான வித்தியாசமும் இல்லை நீங்கள் இவ்வாறு உங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் அது புதியவர்களுக்கு பாதை போட்டு கொடுத்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை என தெரிவித்து இருக்கிறார்.

Exit mobile version