ஜெயலலிதா நினைவுதினத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் விட்டுக் கொடுக்க மாட்டோம் விலகிப் போக மாட்டோம் என்று சசிகலா டிடிவி தினகரன் ஆகியோர் ஜெயலலிதாவை வணங்குவது போல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் நேற்றைய தினம் அனுசரிக்கப்பட்டது மெரினா கடற்கரையில் இருக்கின்ற அவருடைய நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் மற்றும் அதிமுக அமைச்சர்கள் போன்றோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள் அதே நேரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல கட்சியினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் பல இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்த நிலையில் ஜெயலலிதா நினைவுதினத்தை முன்னிட்டு டிடிவி அணியினர் சார்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம் விலகிப்போகவும் மாட்டோம் என எழுதப்பட்டிருந்தது சசிகலா அடுத்த மாதம் விடுதலையாக இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் இந்த சுவரொட்டிகள் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றது.