Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வங்கி கணக்குகளை முடக்கிய- வருமான வரித்துறை.!!

ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது வருமான வரித்துறையினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உச்ச கட்ட விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வரி இன்னும் செலுத்தப்படாமல் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும், 2 எஸ்டேட்டுகளின் வங்கி கணக்கை முடக்கி வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கோத்தகிரி ஈளடாவில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் உள்ள எஸ்டேட் களின் வங்கி கணக்குகளை முடக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்டேட்களின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் 700க்கும் மேற்பட்ட எஸ்டேட்டில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது.

Exit mobile version