Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! அவகாசம் கேட்ட ஆணையம் அறிவுறுத்திய தமிழக அரசு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வந்தது.

இந்த நிலையில், விசாரணை நிறைவடைந்த சூழ்நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடைபெற்று வந்தது. விசாரணை ஆணையத்திற்கு ஏற்கனவே 13 முறை கால நீட்டிப்பு வழங்கிய சூழ்நிலையில், அந்த விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை வழங்காததால் ஆணையம் அறிக்கை நிறைவுபெறாத நிலையிலிருக்கிறது.

ஆகவே மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்குமாறு விசாரணை ஆணையம் தரப்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் வழங்கி எதிர்வரும் 24ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அறிவுறுத்தியிருக்கிறது.

Exit mobile version