ஜெயலலிதா- வை கட்டாயம் காப்பாத்திருக்கலாம் இதனால் தான் இறந்தார்- அதிமுக மாஜி அமைச்சர்!!

0
174
Jayalalithaa might have to be saved, that's why she died - AIADMK ex-minister!!

ADMK: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து அதிமுக மாஜி அமைச்சர் உருக்குமாக பேசியுள்ளார்.

அதிமுக மாஜி அமைச்சர் எஸ் பி வேலுமணி மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் குறித்து உருக்கமாக பேசியிருப்பது தற்பொழுது வைரலாகி வருகிறது. ஜெயலலிதா அம்மா கட்சிக்காக தன்னை கவனிக்கவில்லை என்றும் அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருக்க முடியும் அப்படி பெற்றிருக்கும் பட்சத்தில் கட்டாயம் உயிரோடு இருந்திருப்பார்.

ஆனால் அவர் கட்சியை பற்றி நினைத்துக் கொண்டு அமெரிக்காவிற்கு செல்லவில்லை. இதேபோல நாங்கள் ஆட்சியில் இருந்த வரை சட்ட ஒழுங்கு சீர்கேடு என்ற பிரச்சனையே இல்லை அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் ஒரு மாதிரியாகவே நடத்தினோம். ஆனால் இப்பொழுது ஆட்சி முறையில் அவ்வாறு இல்லை அதற்கு ஏற்றவாறு காவல்துறை அதிகாரிகளும் மாறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கோவையில் திமுகவால் ஒரு அமைச்சரைக் கூட கொண்டு வர முடியவில்லை. தற்பொழுது வரை அதிமுகவில் 70 க்கும் ஏற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளனர். அதேபோல மாணவர்கள் மத்தியில் கஞ்சா புலக்கமானது முன்னப விட மாணவர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. இதனை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இப்படியே சென்றால் கட்டாயம் மாணவர்களின் நிலை மிகவும் மோசமாக மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.