இன்று முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 77 வது பிறந்த நாளை அவர்களது கட்சியினர் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் கொண்டாடி வருகின்றனர். திரையுலகினரும் இவருடைய பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ஜெயலலிதாவின் இல்லத்திற்கு சென்று அவருடைய திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்பு பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
2 படங்களுக்கு நடிகை ஜெயலலிதா உடன் தான் நடிக்க இருந்ததாகவும் ஆனால் அந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிப்பதற்கு அவர் மறுத்துவிட்டார் எனவும் தெரிவித்திருக்கிறார். அதற்கான காரணத்தை ஜெயலலிதா அவர்கள் ஒரு கடிதம் ஆகவே எழுதியும் அப்பொழுது வெளியிட்ட இருந்தது அனைவரும் அறிந்ததே. அதாவது 1980 களில் ஜெயலலிதா அவர்களுக்கு வாய்ப்பு குறைந்துவிட்டது என்றும் சினிமா துறையில் அவர்களை இனி யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று புரளிகளும் கிளம்பிய நிலையில் அதனை சரிகட்டும் விதமாக ஜெயலலிதா அவர்கள் கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில் நடிகர் ரஜினியுடன் நடிப்பதற்கு இரண்டு முறை தனக்கு வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் 1982ல் அரசியலில் நுழைவதற்காக தான் அந்த படங்களை மறுத்துவிட்டதாகவும், மற்றபடி வாய்ப்புகள் தன்னை தேடி வந்து கொண்டு தான் இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா அவர்களின் இல்லத்திற்கு ரஜினிகாந்த் அவர்கள் நான்காவது முறையாக சென்று இருப்பதாகவும் முதல் முறை தன்னுடன் படத்தில் நடிப்பதற்காக பேச சென்றதாகவும் இரண்டாவது முறை தன்னுடைய திருமண மண்டபத்தை திறந்து வைக்க அழைத்ததாகவும் மூன்றாவது முறை தன்னுடைய மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுக்க சென்றதாகவும் நான்காவது முறையாக தற்பொழுது நான் வந்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.