2006 ஆம் ஆண்டு ஜெயம்ரவியின் படத்தில் அறிமுகமானவர் தான் காம்னா ஜெத்மலானி. இவர் அந்த படத்தில் மாணவியாக நடித்து இருந்தார். தமிழில் இவர் மச்சக்காரன், ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
காம்னா மும்பையில் பிறந்தவர் ஆவார். 2004 ஆம் ஆண்டு மிஸ் மும்பை போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் இடத்தைப் கைப்பற்றினார். இதனால் இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் , கன்னட படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
2014 ஆம் ஆண்டு சூரத் நாக்பால் கோபால் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் பெங்களூரை சேர்ந்தவர் ஆவார். ஆகையால் காம்னா தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் கணவருடனும் சேர்ந்து பெங்களூரில் வசித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னும் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.