Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜேஇஇ தேர்வு – மாணவர்கள் கட்டணம் செலுத்துவதற்கான இறுதி நாள் இன்று!

ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. கட்டணம் செலுத்த வேண்டிய கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளது.

மேலும் இந்த தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திற்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாணவர்கள் கூடுதல் தகவல்களை பெறுவதற்கு இணையதளத்தை அணுகும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஜேஇஇ முதல்நிலைத் தேர்வானது, நாடு முழுவதிலும் இருக்கும் ஐஐடி, என்ஐடி உள்பட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனத்திலும், இளநிலை படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.

இந்த ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களை, கடந்த மாதம் டிசம்பர் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து பெற்று வருகிறது. மேலும் இத்தேர்வு குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்வதற்கு இணையதளத்தை அணுகும்படி தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Exit mobile version