Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

செம்ம கியூட் பேபி டால் மாதிரி இருக்காங்க !! பாக்யலட்சுமி ஜெனியின் கியூட் வீடியோ!!

செம்ம கியூட் பேபி டால் மாதிரி இருக்காங்க !! பாக்யலட்சுமி ஜெனியின் கியூட் வீடியோ!!

திவ்யா கணேஷ் கோலிவுட் சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். இவர் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும் ஆர்கே சுரேஷை நிச்சயதார்த்தம் செய்திருந்தார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இவர்களின் திருமணம் திடீரென நின்று போனது.

மேலும், அந்த திருமணம் நின்று போன பின்பும் தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் இவர் நடித்து வருகிறார். தற்போது இவர் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ‘ஜெனி’ என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக செழியன் என்ற வேலு லக்ஷ்மணன் நடிக்கிறார். இவர்கள் இருவரும் சிறுவயது முதல் நண்பர்களாக உள்ளனர். பின் அந்த நட்பு இவர்களுக்குள் காதலாக மாறுகிறது. இருவர் வீட்டிலும் ஒப்புக்கொள்ளாத நிலையில், ஜெனி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறுகிறார்.

அது பாக்யலட்சுமிக்கு தெரிந்து பின், இரு குடும்பத்தையும் அவர் சமாதானம் செய்து திருமணம் நிகழ்கிறது. பின் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.ஆனாலும் அவர்கள் குடும்பத்தில் யாரும் ஜெனியை ஏற்றுக்கொள்ளவில்லை.

சிறிது நாட்களுக்கு பிறகு ஜெனியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின் செழியனுக்கும், ஜெனிக்கும் இடையே சிறிய சிறிய சண்டைகள் வந்து சமாதானம் ஆகி முடிந்தது.இந்த நிலையில், தற்போது இந்த தொடரில் இவர்கள் இருவருக்கும் இடையே பல சிக்கல்கள் ஏற்பட்டு சண்டையும், சச்சரவுமாக உள்ளனர்.

இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியல் மூலமாக இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.மேலும், தற்போது ஜெனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

Exit mobile version