நகைப்பிரியர்களே இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

0
310
#image_title

நகைப்பிரியர்களே இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம் அனைவரும் தங்கம் சிறந்த முதலீடு இருந்து வருகிறது. மண் மற்றும் பொன்னில் போட்ட காசு என்றும் வீணாகாது என்ற பொன்மொழி இருக்கிறது. எதிர்காலத்திற்கு அவசரத் தேவைக்கு உதவும் என்று தங்கத்தை காயினாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்கும் பழக்கம் மக்களிடையே அதிகரித்து வருவதால் இதன் விலை ஏறினாலும், இறங்கினாலும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறையாமல் இருந்து வருகிறது.

சமீப காலமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் என்று மாறி மாறி நிகழ்ந்து வருகிறது. நேற்று 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,835 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை சற்று குறைந்து இருக்குறது.

அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,825க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,600க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,355க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.50,840க்கும் விற்பனையாகி வருகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.80.70 காசுக்கும் 1 கிலோ வெள்ளி ரூ.80,700க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கத்தின் விலை சற்று குறைந்து இருப்பது நகைப் பிரியர்களிடையே ஆறுதலை அளித்து இருக்கிறது.