Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!!

கோயில் தேர்த் திருவிழாவில் அக்கா தங்கைகள் மூவரும் சேர்ந்து செய்த அசிங்கம்! விசாரணையில் அதிரவைத்த சம்பவம்..!!

தமிழக தேர்த் திருவிழாக்களில் திட்டமிட்டு அக்கா மற்றும் இரு தங்கைகள் சேர்ந்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கோணியம்மன் கோயிலில் ஒவ்வொரு வருடம் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்த வருடமும் வழக்கம்போல தேர் திருவிழாவில் பலாயிரம் கணக்கான கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் இந்துமதி, பராசக்தி, செல்வி ஆகிய மூன்று சகோதரிகளும் திட்டமிட்டு கோயில் திருவிழாவிற்கு வருகை தரும் சக பெண்களின் நகைகளை பிளானுடன் கொள்ளையடித்துள்ளனர். இலங்கை, லண்டன் மற்றும் கேரளாவில் இருக்கும் இவர்கள் திருட்டுத் தொழிலுக்காக ஒன்று கூடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

கோவை கோயில் திருவிழாவில் இவர்களின் திருட்டு சம்பவம் சமூகத்தின் மூன்றாவது கண்ணான சிசிடிவி காட்சியில் பதிவாகியதால் போலீசாரிடம் மூவரும் சிக்கி கைதாகினர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வாக்குமூலமாக வெளிவந்துள்ளது.

3 பேரும் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது;

இந்துமதியில் கணவர் பாண்டியராஜன் இணையத்தின் மூலம் எந்த ஊரில் திருவிழா நடக்கிறது என்று முதலில் பிளான் போடுவார். பின்னர், இரண்டாவதாக சுற்றுலா விசாவின் மூலம் சம்பந்தபட்ட ஊருக்கு சென்று அறை எடுத்து தங்குவது வழக்கம். மூன்றாவதாக திருவிழாவில் என்னென்ன கெடுபிடிகள் இருக்கிறது என்பதை அந்த கோயில் திருவிழா நடக்கும் இடத்தை ரகசியமாக நோட்டமிடுவது. இதனையடுத்து திருவிழாக்களுக்கு மக்களோடு மக்களாக கூட்டத்தில் கலந்து பலரது தங்க நகைகளை அபேஸ் செய்துவிடுவோம்.

இதுபோல் பல திருவிழாக்களில் திருடி சென்னை திருவான்மியூரில் சொந்தவீடே வாங்கியுள்ளோம் என்று அதிர வைத்தனர்.
ஒரே திருவிழாவில் 100 சவரன் நகைகளுக்கு திருடி அதை பாண்டியராஜன் மூலம் விற்று பங்கு பிரித்துக் கொண்டு மீண்டும் எங்கள் சொந்த ஊருக்கே சென்று விடுவோம் என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

தாலியறுப்பு, குழந்தைகளிடம் நைசாக பேசி நகையை கொள்ளையடித்த மூன்று சகோதரிகளையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தப்பித்த பாண்டியராஜனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடமிருந்து 35 சவரன் திருட்டு நகைகள் மீட்டகப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. பலநாள் திருடர்கள் ஒருநாள் மாட்டிக் கொண்டார்கள்.

Exit mobile version