Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தலைவி படம் தேர்தல் சமயத்தில் வெளியீடு? பரபரப்பு தகவல்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகி வரும் படம் தான் தலைவி. இதனை எழுதி இயக்கி வருகிறார் படத்தில் ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடிக்க அரவிந்த்சாமி நடித்திருக்கின்றார். அதைத்தவிர மதுபாலா, பூர்ணா, சமுத்திரகனி, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், இந்தி, என்று மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி வருகின்றது.ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்துடைய படப்பிடிப்பு ஆனது கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் அக்டோபர் மாதம் மறுபடியும் படப்பிடிப்பு ஆரம்பமானது.இரண்டு மாதங்கள் வேகம் எடுத்த இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்று இருக்கின்றது.

வாழ்க்கையிலே ஒரு முறைதான் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் என்று படப்பிடிப்பை முடித்த கங்கனா ரனாவத் தெரிவித்திருக்கின்றார். படத்துடைய போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன தேர்தலுக்கு முன்பாகவே இந்த படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரவிருக்கும் சட்டசபை தேர்தலின்போது, இந்தப்படம் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கிறார்கள் அதற்கு முன்னரே ஜெயலலிதா பயோபிக் என்று குயின் படம் இணையதளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version