பாஜக ஆளும் இன்னொரு மாநிலத்திற்கு தேர்தல்! ஆட்சியை இழக்குமா? தக்க வைக்குமா?

0
155

பாஜக ஆட்சி செய்த இரண்டு மாநிலங்களான மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய 2 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிராவில் பாஜக -சிவசேனா கூட்டணி வெற்றி பெற்ற போதிலும் முதல்வர் பதவி தொடர்பான இழுபறியால் புதிய அரசு இன்னமும் பதவியேற்கவில்லை. அதேபோல் ஹரியானாவில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத போதிலும் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பாஜக ஆட்சி செய்யும் இன்னொரு மாநிலமான ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி சற்றுமுன் தலைமை தேர்தல் ஆணையரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்டில், மொத்தமுள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருப்பதாகவும், நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும், டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்படுள்ளது

*நவம்பர் 30-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு

*டிசம்பர் 7-ம் தேதி: 2-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 12-ம் தேதி: 3-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 16-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 20-ம் தேதி: 4-ம் கட்ட வாக்குப் பதிவு

*டிசம்பர் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது

மேலும் நவம்பர் 13-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் வேட்புமனு நவம்பர் 14-ம் தேதி பரிசீலிக்கப்பட்டு அடுத்த நாள் இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும், அதே வெற்றி அதன் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது எதிர்க்கட்சிகளிடம் இழக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்