Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல நடிகரின் மகன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி!!!

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும் பிரபல குணச்சித்திர நடிகராகவும் உள்ள சின்னி ஜெயந்த்-இன்  மகன்  ஸ்ருதன்  ஜெய் நாராயணன் யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 75 ஆவது இடத்தை பெற்றுள்ளார்.

இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ்சினிமாவில் பிரபலங்களின் மகன்கள் அனைவரும் எளிதாக திரை உலகத்தில் நுழைந்து விடும் வாய்ப்பு இருந்தும் ஸ்ருதன்  ஜெய் நாராயணன்  இந்திய குடிமைப்பணி தேர்வு செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம் தானே!

இவர் தனது பள்ளி, கல்லூரி மற்றும் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்புகள் அனைத்தும் சென்னையிலேயே தான் முடித்துள்ளார்.

நேற்று வெளியான யூபிஎஸ்சி தேர்ச்சி பட்டியலில். இவர் 75 ஆவது இடத்தைப் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதற்கு முழு காரணம் எனது  குடும்பம் தான்  என்றும் பெருமிதம் கொண்டார்.

 

Exit mobile version