ஜியோவின் ஜியோ மீட் செயலி! ஜூம் செயலிக்கு போட்டியாக ஜியோ மீட்

0
142

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையில் அரசு ஆலோசனைகள், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் முக்கிய சந்திப்புகள் அனைத்தும் ஜூம் என்னும் செயலி மூலம் தான் நடந்து வருகிறது.

இந்த ஜூம் செயலியானது ஆபத்தானது இதில் தனி நபர் தகவல்கள் அனைத்தும் எடுக்கப்படுகிறது என பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலும் பல்வேறு அரசியல் கட்சிகள்,கல்வி நிறுவனங்கள் ஜூம் செயலி மூலமாகவே சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது இந்த ஜூம் செயலிக்கு இணையாக ஜியோ மீட் எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இந்த செயலியினை வெளியிட்டது. இந்த செயலி ஜூம் செயலியை விட மிக தெளிவான காட்சி அமைப்பும் எளிதான இணைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.

இந்த செயலியை கூகிள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.மேலும் இந்த செயலியில் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இதன் மூலம் ஹெச் டி தரத்துடன் இணைப்புகளை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவே இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும் விரைவில் இந்த ஜூம் மற்றும் ஜியோ மீட் செயலிக்கு இடையே போட்டி நிலவ வாய்ப்பு இருக்கிறது.