Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜீயோவின் அதிரடி ஆஃபர்!! ரூ.895 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!!

Jio's Action Offer!! 336 days validity for Rs.895!!

Jio's Action Offer!! 336 days validity for Rs.895!!

முகேஷ் அம்பானி உடைய ஜியோ நிறுவனம் வந்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. எனினும் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் இருந்து வருடாந்திர பிளான்களின் விலைகளை குறைத்து புதிய ஆபர்களை அறிமுகம் செய்து வருகிறது.

அவ்வாறாக தற்பொழுது, ஜியோ ரூ 895 திட்டம் 336 நாட்கள் வேலிடிட்டி :-

இந்த ஜியோபோன் வருடாந்திர திட்டத்தில் (JioPhone Yearly Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), மாதாந்திர டேட்டா (Monthly Data) மற்றும் மாதாந்திர எஸ்எம்எஸ் (Monthly SMS) மட்டுமல்லாமல், ஜியோ நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.

மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 336 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 28 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு மேற்கண்ட சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பெற்று கொள்ள முடியும்.

மேலும், இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகளை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளை 28 நாட்களுக்கு முன்பாகவே முழுவதும் பயன்படுத்திவிட்டால், டேட்டாவானது 64 கேபிபிஎஸ் வேகத்துக்கு குறைக்கப்படும். எஸ்எம்எஸ்களுக்கு கட்டணம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக, ஒரு மாதத்தில் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 SMS முடிவடைந்து விட்டால், அடுத்த 28 நாட்கள் மீண்டும் 2 ஜிபி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைத்துவிடும். இப்படி வாய்ஸ் கால்களை தவிர மற்ற சலுகைகள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளும்படி மாதாந்திர கணக்கில் வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளுக்கு பிறகு வழக்கமான ஜியோ நிறுவனத்தின் சலுகைகள் கிடைக்கிறது. ஆகவே, ஜியோசினிமா (JioCinema) ஆப் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையுடன் கூடுதல் இணைப்பாக ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களின் சப்ஸ்கிரிப்ஷனும் கிடைக்கிறது.

Exit mobile version