ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவை!!! நாளை அறாமுகமாகின்றது என்று ஜியோ அறிவிப்பு!!!

0
125
#image_title

ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவை!!! நாளை அறாமுகமாகின்றது என்று ஜியோ அறிவிப்பு!!!

ஜியோ நிறுவனத்தின் புதிய வயர்லெஸ் இண்டர்நெட் சேவையான ஜியோ ஃபைபர் இண்டர்நெட் சேவை நாளை அதாவது செப்டம்பர் 19ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஒன்றாக இருக்கின்றது. ஜியோ நிறுவனம் நெட்வொர்க் சேவைகளில் மட்டுமில்லாமல் ஓடிடியிலும் ஜியோ சினிமா என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றது. ஜியோ நிறுவனம் தங்களது பயனர்களுக்கு பலவிதமான இணைய சேவைகளை வழங்கி வருகின்றது.

அதில் ஒன்று இணைய வசதி ஆகும். இந்நிலையில் ஜியோ நிறுவனம் பயனர்களுக்கு வயர்லெஸ் இண்டர்நெட் வசதி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

அதாவது அலுவலகங்களுக்கும் சரி, வீடுகளுக்கும் சரி, எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எளிமையான முறையில் வயலர்லெஸ் மூலமாக இணையம் அதாவது இண்டர்நெட் பயன்படுத்தும் வகையில் ஜியோ நிறுவனம் ஜியோ ஃபைபரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஃபைபர் சேவையில் அதிகபட்சமாக 1.5 ஜிகா பிட் வேகத்தில் இன்டர்நெட் இணைப்பை பெற்று இதயத்தை பயன்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம் நடைபெற்ற பொழுது ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி அவர்கள் “பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கும் வகையில் ஜியோ ஃபைபர் வயர்லெஸ் இணைய சேவையை உருவாக்கி இருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இந்த ஜியோ ஃபைபர் இணைய சேவையின் சிறப்பம்சங்கள் என்ன என்று தெரிந்து கொள்வோம்.

ஜியோ ஃபைபரின் சிறப்பம்சங்கள்…

* ஜியோ ஃபைபர் 5ஜி இணைப்பில் இயங்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

* பிளக்-அன்ட்-பிளே மோடில் பயனர்கள் இதை எளிதாக நிறுவி பயன்படுத்த முடியும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது தனிப்பட்ட ஹாட்ஸ்பாட் போல ஜியோ ஃபைபர் இயங்கும் என்று தெரிகின்றது.

* பாயிண்ட் -டு – பாய்ண்ட் ரேடியோ லிங்க் மூலமாக ஜியோ ஃபைபர் இயங்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இணையம் பெறுவதற்கும், இணையத்தை இணைப்பதற்கும் வயல்லெஸ் சிக்னல்கள் பயன்படுத்தப்படுகின்றது.

* ஜியோ ஃபைபர் மூலமாக நொடிக்கு 1.5 ஜிகா பிட் என்ற வேகத்தில் நாம் இணைய வேகத்தை பெற்று பயன்படுத்தும் வகையில் ஜியோ ஃபைபர் உருவாக்கப்பட்டுள்ளது.

* இதோடு ஜியோ ஃபைபரில் பேரன்டல் கண்ட்ரோல் டூல் வசதி வருகின்றது. மேலும் வை-பை 6, ஜியோ செட்டாப் பாக்ஸ் பான்ற வசதிகளுடன் விற்பனைக்கு வரவுள்ளது.

* நாளை(செப்டம்பர்19) அறிமுகமாகும் இந்த ஜியோ ஃபைபர் இணைய சேவையின் விலை 6000 ரூபாயாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. ஜியோ ஃபைபரின் விலை ஜியோ பிராட்பேண்டின் விலையை விட கூடுதலாக இருக்கின்றது.