வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கொடுத்த சர்ப்ரைஸ்! குறைந்த விலைக்கு இரண்டு புதிய ரீசர்ஜ் திட்டங்கள்!!
குறைந்து வரும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும், புதியதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் இந்தியாவில் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. மேலும் மற்ற இரண்டு நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் விஐ நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டத்தின் விலையை உயர்த்தியது.
இதையடுத்து வாடிக்கையாளர்கள் அனைவரும் இந்தியாவின் அரசு நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறி வருகின்றனர். மேலும் ஜியோவில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதிகம் பேர் மாறி வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட 30 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற தனியார் நெட்வவொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறியுள்ளனர். இந்நிலையில் ஜியோவின் பங்குகள் சரியத் தொடங்கியது. இதையடுத்து குறைந்து வரும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் புதியதாக வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் ஜியோ நிறுவனம் இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கியுள்ளது.
அதன்படி முதலாவதாக ஜியோ நிறுவனம் 209 ரூபாய் மதிப்புள்ள புதிய ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி தினமும் ஒரு ஜிபி டேட்டாவை இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும் அன்லிமிடெட் கால்ஸ் வசதியும் ஒரு. நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வசதியும் வழங்குகின்றது. மேலும் இதனுடன் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற வசதிகளையும் வழங்குகின்றது. இந்த திட்டம் 22 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
அதே போல 239 ரூபாய்க்கும் புதிய திட்டம் ஒன்றை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும் தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் ஆகிய வசதிகளை ஜியோ நிறுவனம் இந்த திட்டம் மூலமாக வழங்குகின்றது. இந்த திட்டமும் 22 நாட்கள் செல்லுபடியாகும்.
239 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்திலும் 209 ரூபாய் திட்டம் போல ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற வசதிகளையும் வழங்குகின்றது. மேலும் ஜியோ நிறுவனத்தின் முதல் 22 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.