Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜாப் அலர்ட்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 670 காலிப்பணியிடங்கள்!

#image_title

ஜாப் அலர்ட்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 670 காலிப்பணியிடங்கள்!

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள “உதவிப் பொறியாளர்” பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

பணி:

*உதவிப்பொறியாளர்

பணியிடங்கள்: 670

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.37,700/- முதல் ரூ.1,38,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-03-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.

Exit mobile version