ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

0
114
#image_title

ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் மாதம் 18000 ஊதியத்துடன் வேலை! பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்!

ஈரோடு மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில்நுட்ப பணியாளர்,வழக்குப் பணியாளர், பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஒப்பந்தம் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமான பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 15-09-2023 வரை வரவேற்கப்படுகிறன.

வேலை: அரசு பணி

1.பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர்

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியல் துறைகளில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்ப் படிப்பை முடித்துள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

முன் அனுபவம்: அரசு,அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான பணிகளில் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளம் வழங்கப்படும்.

2.பதவி: வழக்குப் பணியாளர் (Case Worker)

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.உளவியல் ஆலோசகர் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) அரசு,அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது தொடர்பான பணிகளில் குறைந்தது 1 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.இப்பதவிக்கு ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது 35க்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

3.பதவி: பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஏதாவது ஒரு அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் கொண்ட ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மாத சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.6,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: நேரடி அல்லது தபால் வழி

இப்பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் erode.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.விண்ணப்பங்களை பூர்த்தியிட்டு அவற்றை முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரடி அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

முகவரி:

மாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,மாவட்ட ஆட்சியரகம்,6வது தளம்,ஈரோடு – 638 011.

கடைசி தேதி: செப்டம்பர்  15 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.