இந்திய கடலோர காவல்படையில் வேலை! 10 ஆம் வகுப்பு முடித்திருந்தாலே போதும்!
இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.அந்த வகையில் தற்பொழுது கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக் பணிக்கான 350 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வேலை: மத்திய அரசு வேலை
பணி: கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக்
காலிப்பணியிடங்கள்: 350
கல்வித் தகுதி: கடலோர காவல் படை நாவிக் மற்றும் நேவிக் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி,டிப்ளமோ முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு: இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.குறிப்பிட்ட பிரிவினருக்கு,அரசு விதிகளின்படி வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
தேர்வு முறை: எழுத்து தேர்வு நடத்தப்பட்டு,தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான தேர்வுநாள் இணையதளத்தில் வெளியாகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 22
மேலும் தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.செப்டம்பர் 22 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.விண்ணப்பம் செய்யவும் விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.joinindiannavy.gov.in மற்றும் www.indiannavy.nic.in ஆகிய இணையதளங்களை பார்வையிடவும்.