இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல் 

0
206

இரயில்வே பாதுகாப்பு படையில் பணி! மத்திய அரசு தெரிவித்த முக்கிய தகவல்!

ரயில்வே பாதுகாப்பு பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிடவில்லை. இதற்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் கற்பனையான தகவல்கள் பரப்பப்படுகின்றன.என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ரயில்வேயில் பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பதவிக்காக 19800 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைபெற இருக்கிறது என ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நிறைய பேர் தயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில் ரயில்வே அமைச்சகம் இந்த செய்தியை மறுத்துள்ளது.

இதனை அடுத்துபாதுகாப்பு படை தொடர்பான ஆட்சேர்ப்பு தகவல்களை மறுத்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறியிருப்பதாவது,    ரயில்வே பாதுகாப்பு படையில் 19, 800 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. மத்திய அரசின் மூலம் அத்தகையை எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை.

ரயில்வே பாதுகாப்பு படையும் அல்லது ரயில்வே அமைச்சகமும் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது எந்த ஆச்சு மின்னணு ஊடகங்கள் மூலமாகவும் எந்த அறிவிப்பையும் இதுவரையும் வெளியிடப்படவில்லை. இணையத்தில் வெளிவரும் தகவல்கள் போலியானது. அதை யாரும் நம்ப வேண்டாம். அதை அனைவரும் புறக்கணிக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தனது செய்தி குறிப்பில் தனது மறுப்பை தெரிவித்துள்ளது.