Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பயிற்சி  முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

Job opportunities in leading companies for those who complete the training!! Women's Vocational Training Institute Action Notification!!

Job opportunities in leading companies for those who complete the training!! Women's Vocational Training Institute Action Notification!!

பயிற்சி  முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு!! மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனம் அதிரடி அறிவிப்பு!!

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற் பயற்சி நிலையத்தின் மூலம் பல மகளிர்களுக்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகளை அளித்து சுய தொழில் தொடங்கும் அளவிற்கு பயற்சி அளிக்கபடுகிறது.

மேலும் இந்த தொழிற்பயிற்சி நிலையம்  மூலம் 8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் வரை பயிற்சி அளிக்கபடுகிறது. அதனை தொடர்ந்து 8 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ஓராண்டு தையல் பயிற்சியும், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வருடம் எஸ்சிவிடி மற்றும் என்சிவிடி பயிற்சியும், 2 வருடம் கட்டட வரைவாளர் பயிற்சியும், 1 வருடம் ஸ்டேனோகிராபி பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனை தொடர்ந்து இந்த பயற்சியில் சேரும் மாணவிகள் மற்றும் மகளிருக்கு உதவித்தொகை 750 ரூபாய், இலவச பஸ் பாஸ், மிதிவண்டி, பாட புத்தகங்கள், காலணிகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் பயிற்சி  முடித்தவர்களுக்கு முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வாங்கி தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிக்கான மகளிர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த நிலையத்தில் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தேவையான ஆவணங்கள் மதிப்பெண் சான்று, ஜாதி மற்றும் மாற்று சான்று, ஆதர அட்டை, பாஸ்போர்ட் அளவில் ஐந்து புகைப்படம் ஆகியவை தேவை என்றும் தெரிவித்துள்ளது.

Exit mobile version