Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! 12வது படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க!!

#image_title

இரயில்வே துறையில் வேலை வாய்ப்பு! 12வது படித்திருந்தால் போதும் உடனே அப்ளை பண்ணுங்க
இந்திய இரயில்வே துறையில் காலியாக இருக்கும் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
இந்திய ரயில்வேயில் தற்பொழுது காலியாக இருக்கும் 1785 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இந்த வேலை பற்றிய மற்ற விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
பணியின் பெயர்…
தென்கிழக்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் அப்ரண்டிஸ் வேலைக்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
பணியிடங்கள்…
தென்கிழக்கு இரயில்வேயில் காலியாக இருக்கும் 1785 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது.
கல்வித்தகுதி…
தென்கிழக்கு இரயில்வேயில் தற்பொழுது வெளியாகியுள்ள அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்க 12வது அல்லது ஐடிஐ(ITI) படித்திருந்தால் போதும்.
வயது வரம்பு…
தென்கிழக்கு இரயில்வேயில் தற்பொழுது வெளியாகியுள்ள அப்ரண்டிஸ் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு வயது 24க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை…
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் மெரிட் லிஸ்ட் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.
விண்ணப்பிக்கும் முறை…
தகுதியும் விருப்பமும்  உள்ள நபர்கள் rrcser.co.in/notice.html என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது https://iroams.com/RRCSER23/applicationAfterIndex என்ற லிங்க்கை கிளிக் செய்து நேரடியாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி…
இந்த வேலைக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Exit mobile version