Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என பணம் பறிப்பு – விமான நிலைய அதிகாரிகள் எச்சரிப்பு 

Job opportunity at the airport - Airport officials warn

Job opportunity at the airport - Airport officials warn

விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு என பணம் பறிப்பு – விமான நிலைய அதிகாரிகள் எச்சரிப்பு

சேலம் ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் விமான நிலையத்தில் தற்போது விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் போலியான செய்திகள் உலா வந்துள்ளது.

இந்நிலையில் பலர் இதனை நம்பி பணம் செலுத்தி போலியான பணி உத்தரவு கடிதங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர். அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது தெரிய வந்ததாக கண்ணீருடன் அந்த அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் இதுபோன்ற போலியான செய்திகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version