சவுதி அரேபியா நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய செவிலியர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவம் மற்றும் பி எஸ் சி நர்சிங் முடித்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்க செல்லும் பெண்களுக்காக நல்ல சம்பளம், உணவு, இருப்பிடம், விமான பயணச்சீட்டு போன்றவை வழங்கப்படுகிறது. வாழ்க்கையில் செட்டில் ஆக விரும்புவோர் இந்த அரிய வாய்பை பயன்படுத்தலாம். தமிழக அரசே இந்த வேலைக்கான ஆட்களை தேர்வு செய்த அனுப்புகிறது. இதனால் சவுதி அரேபியா நாட்டிற்கு பணிக்கு செல்ல விரும்பும் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
சவுதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் 2 வருட பணி அனுபவத்துடன் பி.எஸ்சி. (நர்சிங்) தேர்ச்சி பெற்ற 35 வயதுக்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கான நேர்காணல் அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை கொச்சியில் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை வேலையளிப்பவரால் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க, www.omcmanpower.tn.gov.in என்ற வலைதளத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுய விவர விண்ணப்ப படிவம், கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவ சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021 @gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு டிசம்பர் 2-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
படிப்பு மற்றும் பணி விவரங்களின் தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்ட பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் அவர் தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.