Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மத்திய அரசின் ரயில்வே நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் கூட அப்ளை செய்யலாம்!!

Job Opportunity in Central Government Railways!! Even if you have studied 12th standard you can apply!!

Job Opportunity in Central Government Railways!! Even if you have studied 12th standard you can apply!!

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் கீழ் இந்நிறுவனம் செயல்படுவதால் இதில் வேலை கிடைத்தால் லைஃப் டைம் செட்டில் ஆகலாம் என்று பலரும் முயற்சித்து வருகின்றனர். தற்சமயம் ரயில்வே துறையின் வேலை வாய்ப்புகள் வெளிவந்துள்ளன.

2025 ஆம் ஆண்டு ரயில்வே துறை வேலைவாய்ப்பில், இந்தியா முழுவதும் 1036 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்தவர்கள் முதல் மேற்படிப்பு படித்தவர்கள் வரை அப்ளை செய்யலாம். முதலில் தேர்வு எழுதி, தேர்ச்சி பெற்ற பின்னர் நேர்முகத் தேர்வு மூலம் செலக்ட் செய்ய உள்ளனர். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 6. கல்வி தகுதியின் அடிப்படையில் பதவிகள் வழங்கப்படும்.

Post Graduate Teacher, Trained Graduate Teacher, Primary Railway Teacher, Public Prosecutor, Staff and Welfare Inspector, Physical Training Introducer, Librarian, Labratory Assistant போன்ற பணிகளுக்கு இந்த வேலை வாய்ப்பை அறிவித்துள்ளனர்.

வயதுவரம்பு : ஜனவரி 1,2025-ஆம் நாளின் படி, 18 முதல் 48 வரை இருக்கலாம். இது பதவிக்கேற்றவாறு மாறுபடும். குறிப்பிட்ட பிரிவினருக்கு மத்திய அரசின் விதிப்படி, வயது வரம்பு தளர்வும் உண்டு. இந்த தேர்வுக்கு கணினி மூலம் நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்தப் பணிக்கு https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள முகவரி மூலம் அப்ளை செய்யலாம். விண்ணப்ப கட்டணம் ரூ. 500. எஸ். சி/எஸ். டி பிரிவினருக்கு ரூ.250 என்று வெளியிட்டுள்ளது.

Exit mobile version