இந்து சமய அறநிலையத் துறையில் வேலை வாய்ப்பு!! விண்ணப்பிக்க கடைசி நாள்!!

0
108
Job Opportunity in Hindu Religious Charitable Sector!! Last day to apply!!

சென்னை: வில்லிவாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலைத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த கோவிலில் பல்வேறு பணியிடங்கள் வேலை வாய்ப்பு நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்கள் நிரப்ப தகுந்த இந்து மதத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கிறது. மேலும் இந்த கோவிலுக்கு 4 பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. இந்த பணி நேரடி நியமனம் அடிப்படியில் நிரப்பப்பட்ட உள்ளது. மேலும் இதற்க்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் வரும் 9.12.2024 வரை விண்ணிப்பிக்கலாம்.

சுயம்பாகி

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கோவில் முறைப்படி பூஜை செய்யவும், பிரசாதம் தயாரிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,200 – 41,800

மின்பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். மின்சார உரிம வாரியத்தில் இருந்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,600 – 39,900

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 11,600 – 36,800

திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000 – 31,500

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: செயல் அலுவலர், அருள்மிகு அகத்தீஸ்வர சுவாமி திருக்கோயில், வில்லிவாக்கம், சென்னை – 600049

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/192/document_1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.