Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??

 

ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.அதன்படி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் வாழ்க்கையில் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது.

அதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு ஏற்றவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த நபர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.மேலும் வேலை நாடுநர்கள் ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்துகொண்டு தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பினை பெற்று கொள்ளலாம்.

 

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் வேலை நாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் இன்று காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலகபதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் கோரப்ப டும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீலிக்கப்படும். இவ்வாய்ப்பை நழுவி விடாமல் இன்று பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Exit mobile version