இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை வாய்ப்பு!.. விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு

0
250
Job Opportunity through Hindu Religious Charities Department!.. Last Date to Apply!!…

திருவானைக்காவல் கோவிலில் வேலை வாய்ப்பு. பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும். விண்ணப்பிக்க கடைசி நாள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட ஜம்புகேஸ்வரர் கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் திருச்சி மாநகரத்தில் அமைந்துள்ள திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் எழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 07.09.2024. அந்நாளன்று மாலை 05:45 மணிக்குள் விருப்பமுள்ளவர்கள் பதிவஞ்சல் மூலமாக தங்கள் விண்ணப்பத்தை அனுப்ப முடியும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் வேலை செய்ய விரும்பினால் மேற்கண்ட பணிக்கு தங்கள் விண்ணப்பத்தை உரிய தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும், www.tnhrce.gov.in மற்றும் thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வழியாக விண்ணப்பத்திற்குரிய மற்ற நிபந்தனைகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட இணையதளங்கள் மூலமாக விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்தகைய விண்ணப்பப் படிவமானது திருக்கோவிலால் வெளியிடப்பட்ட மாதிரி விண்ணப்பப் படிவமாக அமைய வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பில் பதிவு செய்ய விரும்புபவர்கள் நிபந்தனைகளை அறிய திருக்கோவில் அலுவலகத்தை நேரடியாக அணுகலாம் அல்லது மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்களுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருக்கோயில் முகவரிக்கு ரூ. 25/- மதிப்புள்ள அஞ்சல் தலை ஒட்டப்பட்ட அஞ்சலுறையுடன் அனுப்ப வேண்டும். மேலும் விண்ணப்பத்தில் பதவியை சரியாக குறிப்பிட வேண்டும் மற்றும் உரிய சான்றிதழ்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை நேரில் கொடுக்கலாம் அல்லது உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவில், திருவானைக்காவல்- 620005, தொலைபேசி எண் – 04312230257 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கலாம்.