மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சலில் உள்ள வட்டம் சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் அனைத்து அறிவிப்புகளையும் படித்துவிட்டு தங்களுக்கு ஏற்றவாறு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம்: தமிழக அஞ்சல் துறை
பணியின் பெயர் : Tyreman, Blacksmith மற்றும் Staff car Driver
பணியிடங்கள்: 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்
கல்வித்தகுதி :
Car Driver:
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் மூன்று வருடங்களுக்கு லைட் & ஹெவி மோட்டார் வாகனங்களை ஓட்டிய அனுபவம் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
M.V.Mechanic, Copper & Tinsmith, Painter:
சம்பந்தப்பட்ட பணிக்கு ஏற்றவாறு ITI படித்திருக்க வேண்டும்.8 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்:
மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
அனுப்பும் முறை:
தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து, கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை , நெ.37, (பழைய எண் 16/1), கிரீம்ஸ் சாலை, சென்னை– 600 006. என்ற முகவரிக்கு 26.06.2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
https://www.indiapost.gov.in/VAS/Pages/Content/Recruitments.aspx?Category=Recruitment