Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்களுக்கு உதவித்தொகை! மாவட்ட நிர்வாகம் அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் இருக்கிற படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலைவாய்ப்பற்றோர் உள்ளிட்டோருக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்து பயன்படலாம் என்று அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது பத்தாம் வகுப்பு தோல்வி அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேலான கல்வி தகுதிகளை பெற்றவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து வருட காலங்கள் நிறைவேற்ற அடைந்த நபர்கள் வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் உதவி தொகை வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கு மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் அதோடு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 45 வயதுக்குள்ளும் மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்திருந்தால் 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றிருந்தால் 300 ரூபாயும், மேல்நிலைக் கல்வி தேர்ச்சிக்கு 400 ரூபாயும் மற்றும் பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 600 ரூபாய் வீதம் காலாண்டிற்கு ஒரு முறை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் நிறைவடைந்த மாற்றுத் திறனாளி இளைஞர்களுக்கு பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு 600 ரூபாய், மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு 750 ரூபாய், பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு 1000 ரூபாய் வீதம் வாங்கி கணக்கில் செலுத்தப்படும்.

பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் உள்ளிட்ட தொழில் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது. அதோடு இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே பயன்படுத்த அவர்கள் மீண்டும் விண்ணப்பம் செய்ய தகுதியற்றவர்கள் ஆவார்கள்.

உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காட்டி சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்ட பிரிவில் அனைத்து அசல் கல்வி சான்றிதழ் வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன் நேரில் வந்து சமர்ப்பணம் செய்து பயன்பெறலாம்.

Exit mobile version