Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தேர்வு இல்லாமல் ரூ.51570 ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்! 

Job Vacancy in HAL 2022

Job Vacancy in HAL 2022

தேர்வு இல்லாமல் ரூ.51570 ஊதியத்தில் அருமையான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் குறிப்பிட்ட பணியிடங்களுக்கு 3 காலியிடம் உள்ளதாக அவர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

HAL வேலைவாய்ப்பு:

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)  உள்ளிட்ட பணிகளுக்கு 3 காலியிடங்கள் உள்ளது. HAL நிறுவனத்தின் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க பணியாளர்கள்  அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி உடன் MS/ MD/ DNB / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology) பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 65 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 1 முதல் 7 ஆண்டுகள் அந்த பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Visiting Consultant (Ophthalmology) பணிக்கு ஒரு வருகைக்கு ரூ.5000/-மும், Part Time Doctor (Ophthalmology) பணிக்கு ரூ.51,570/- மாத ஊதியம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Visiting Consultant(Ophthalmology, Radiology), Part Time Doctor (Ophthalmology)  ஆகிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

Part Time Doctor (Ophthalmology) பணிக்கு அக்டோபர் 28 ஆம் தேதியும், Visiting Consultant (Ophthalmology) பணிக்கு  31 ஆம் தேதியும் இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Visiting Consultant (Radiologist) பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள படி விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Exit mobile version