Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!!

தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் கொட்டி கிடைக்கும் வேலைகள்!! தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!!

தமிழக அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முறையான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது.அதன்படி
தூத்துக்குடி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.இப்பணிகளுக்கு டிகிரி,டிப்ளமோ படித்தவர்களும், தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கீழே தெரிவிக்கப்பட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பித்து தேர்வாகும் நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த பட உள்ளனர்.

1.டெக்னிக்கல் அசிஸ்டென்ட்:

ஆட்கள்: இப்பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி பிரிவில் மைக்ரோபயாலஜி,பயோ கெமிஸ்ட்ரி,பயோ டெக்னாலஜி,லைப் சயின்ஸ்,அல்லது பிடெக்கில் பயோ டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முன் அனுபவம்: பிஎஸ்சி முடித்தவர்கள் 5 ஆண்டுகள்,எம்எஸ்சி, எம்டெக் முடித்தவர்கள் 2 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

2.ப்ரோகிராம் கம் அட்மினிஸ்ட்ரேட்டிவ் அசிஸ்டென்ட்:

ஆட்கள்: இப்பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

கல்வி தகுதி: டிகிரி முடித்து எம்எஸ் ஆபிஸ் தெரிந்திருந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

3.இன்ட்ரக்டர் (காதுகோளாதவருக்கு):

ஆட்கள்: இப்பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

கல்வி தகுதி: டிப்ளமோ பிரிவில் Training young deaf and hearing handicapped படிப்பை முறையாக முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

4.பிசியோதெரபிஸ்ட்:

ஆட்கள்: இப்பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

கல்வி தகுதி: இளங்கலை பிரிவில் பிசியோதெரபிஸ்ட் படிப்பை முறையாக முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

5.ஆடியோமெட்ரிக் அசிஸ்டென்ட்:

ஆட்கள்: இப்பணிக்கு ஒருவர் தேவைப்படுகிறார்.

கல்வி தகுதி: டிப்ளமோ பிரிவில் DHLS படிப்பை முறையாக முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

6.வேன் கிளீனர்:

ஆட்கள்: இப்பணிக்கு இருவர் தேவைப்படுகிறார்கள்.

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் நன்கு எழுத,படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பணிகளுக்கான வயது வரம்பு மற்றும் ஊதியம் பற்றிய விபரம் அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை.

விண்ணப்பம் செய்வது எப்படி:

இப்பணிகளுக்கு தகுதி மற்றும் ஆர்வம் இருக்கும் நபர்கள் thoothukudi.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி பூர்த்தி செய்து தபால் முறையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 14 ஆகும்.

தேர்வு செய்யும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் முறையில் பணியமர்த்த பட உள்ளனர்.

Exit mobile version