Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!

#image_title

சென்னை மெட்ரோவில் வேலை!! மக்களே நம்பாதீர்.. அலார்ட் செய்த நிர்வாகம்!!
சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தின் வேலைவாய்ப்பு என்ற போலி செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மத்தியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது  சென்னை மெட்ரோ ரயில் நிலையம்.  விரைவில் மதுரை, சேலம், கோவை போன்ற தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவை தொடங்க தமிழக அரசும், மத்திய அரசும் முயற்சித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு என்கின்ற செய்தி வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிலர் இதனை பயன்படுத்தி நூதன முறையில் பிறரை வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இதுகுறித்த அறிவிப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்பு குறித்து செய்தி சமூக வலைத்தளையில் பகிரப்பட்டு வருகின்றது. அது முற்றிலும்  உண்மையல்ல, பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் மெட்ரோ ரயில் நிலையம் வருவதற்கான ஆய்வு பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே,  யாரும் இதனை நம்ப வேண்டாம் என்று சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், அதற்கான முன் அறிவிப்பு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் அதிகாரப் பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்படும். இதைத் தவிர தமிழ், ஆங்கில நாளிதழ் மற்றும் வேலைவாய்ப்பு செய்தித்தாள்களில் (Employment News) அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. எனவே, வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்கள் மற்றும் வேலை தேடுபவர்கள் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் செய்தியை மட்டும் நம்ப வேண்டும்.
Exit mobile version