இந்தியாவின் முன்னணி வங்கியாக திகழும் ரெப்கோ வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றது.பணி,ஊதிய விவரம் மற்றும் விண்ணப்பிப்பது குறித்த முழு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.தகுதி இருப்பவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வேலை வகை: மத்திய அரசு வேலை
நிறுவனம்: ரெப்கோ வங்கி(REPCO BANK)
பணி:
1)மார்க்கெட்டிங்
2)அசோசியேட்
காலிப்பணியிட எண்ணிக்கை: இப்பணிகளுக்கு மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடம்: சென்னை
விண்ணப்பிக்க இறுதி நாள்: டிசம்பர் 09
வயது வரம்பு:
மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் வயது வரம்பு குறித்து அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மார்க்கெட்டிங் மற்றும் அசோசியேட் பணிக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 25 ஆண்டுகள் என்றும் அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்வித் தகுதி குறித்த விவரத்தை அதிகாரபூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மாத ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.
விண்ணப்பக்கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு தகுதி இருக்கும் நபர்கள் www.repcobank .com என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவண நகலை இணைத்து டிசம்பர் 09 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 09-12-2024 ஆகும்.