அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை வெள்ளை மாளிகையில் முதல்முறையாக சந்தித்து இருதரப்பு உறவுகளைப் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை நடந்து முடிந்த பின் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இரண்டு நாட்டு தலைவர்களின் நகைச்சுவையால் சிரிப்பு வெடித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி பைட்னுடன் பேசும்போது, பைடன் தெரிவித்ததாவது எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் நான் கடந்த 1972 ஆம் ஆண்டு இருபத்தி எட்டு வயதில் செனட்டர் ஆக தேர்ந்தெடுத்த சமயத்தில் நான் பதவி ஏற்பதற்கு முன்னர் மும்பையில் பைடன் என்ற நபர் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அவரை அதன் பின்னால் நான் தொடர இயலவில்லை என கூறினேன் அடுத்த நாள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்தியாவில் ஐந்து பைடன்கள் உள்ளதாக என்னிடம் இந்திய பத்திரிகையாளர்கள் தெரிவித்தார்கள் என்று சொல்லி நகைப்புக்கு உள்ளானார் ஜோ பைடன், அவருடைய இந்த கருத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிரிப்பை பதிலாக கொடுத்தார்.
தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் அப்புறம் கிழக்கிந்திய நிறுவனத்தில் கேப்டனாக ஜார்ஜ் பைடன் இருப்பதை நான் கண்டுபிடித்தேன் என மறுபடியும் சிரித்தவர் இறுதியில் அந்த ஜார்ஜ் பைடன் ஒரு இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் என்னால் அவரையும் அதன் பின்னால் கண்காணிக்க இயலவில்லை. இதன் காரணமாக இந்த சந்திப்பு எனக்கு அவற்றை அறிந்து கொள்வதற்கு உதவும் என்று தெரிவித்திருக்கிறார் அப்படி தெரிவித்துவிட்டு பிரதமர் மோடியை பார்க்க அரங்கமே சிரித்ததாம்.
அதன்பிறகு நகைச்சுவைகள் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவாகவும், நெருக்கமாகவும் இறுக்கமாகவும், இருக்க வேண்டும் நாம் இருவரும் எந்த விதமான சவால்களையும் ஒன்றாக இணைந்து சந்திப்போம் என்று கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர்.
இதற்கு பிறகு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி தாங்கள் பைடன் குடும்ப பெயர்களை பற்றி தெரிவித்தீர்கள் நீங்கள் அதனை என்னிடம் முன்பே குறிப்பிட்டு இருந்தீர்கள் நானும் அது குறித்த ஆவணங்களை சேகரிக்க முயற்சி செய்தேன். இப்போது கூட நான் ஒரு சில ஆவணங்களுடன் வருகை தந்துள்ளேன் ஒருவேளை அந்த ஆவணங்கள் உங்களுக்கு ஏதேனும் பயன் தரலாம் என ஜோக்கடித்து இருக்கின்றார் பிரதமர் நரேந்திர மோடி.
உலக நாடுகளில் பெரும்பாலும் இது போன்ற முக்கிய தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் போது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் என்ன உரையாடலாம் என்று முன்னரே தயார் செய்து எழுதி வைத்திருப்பார்கள். அதை தாண்டி தலைவர்கள் வேறு எதுவும் பேசுவதற்கான வாய்ப்பு அமையாது ஆனால் அமெரிக்க அதிபர் அந்த மரபுகளை உடைத்தெறிந்து இந்தியா தொடர்பான தன்னுடைய நினைவலைகளை நகைச்சுவையாக பகிர்ந்து கொண்டு இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியும் அவருக்கு சுவாரஸ்யமாக பதில் கொடுத்து மகிழ்ச்சியின் அளவையும் கூட்டியிருக்கிறார்.