அமெரிக்காவின் ஜனாதிபதி ஆன ஜோ பிடன், இந்திய-அமெரிக்க வர்த்தக நிபுணர் அருண் வெங்கடராமனை வெளிநாட்டு வர்த்தக சேவை தொடர்பான தனது நிர்வாகத்தில் முக்கிய பதவி வகிக்க நியமனம் செய்துள்ளார். அமெரிக்க வாழ் அருண் வெங்கடராமன் அமெரிக்காவின் ஜெனரல் இயக்குநர் மற்றும் வெளிநாட்டு வணிக சேவையின் வேட்பாளராகவும், வர்த்தகத் துறையின் உலகளாவிய சந்தைகளுக்கான உதவி செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்று புதன்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிட பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகங்கள் குறித்து , சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவதில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர் அருண் வெங்கடராமன். அவர் தற்போது வர்த்தக செயலாளரின் ஆலோசகராக பணியாற்ற உள்ளார். மேலும் வர்த்தக மற்றும் பிற சர்வதேச பொருளாதார விஷயங்கள் குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு கொடுக்க பட்டுள்ளது.
பிடென்-ஹாரிஸ் நிர்வாகத்தில் சேருவதற்கு முன்பு, அருண் வெங்கட்ராமன் VISA – வில் ஒரு சீனியர் இயக்குநராக இருந்துள்ளர். டிஜிட்டல் பொருளாதாரம், வர்த்தகம், வரி மற்றும் பொருளாதாரத் தடைகள் உலகளாவிய அரசாங்க பிரச்சனைகளை எதிர்கொண்டு வழிநடத்தி உள்ளார்.
அருண் வெங்கடராமன் முன்பு ஸ்டெப்டோ & ஜான்சன் எல்.எல்.பி.யில் வர்த்தக சார்ந்த மற்றும் முதலீட்டு கொள்கை ஆலோசகராக பணியாற்றி உள்ளார்., மேலும் அங்கு அவர் இ-காமர்ஸ், அறிவுசார் சொத்துரிமை மற்றும் அமெரிக்க மற்றும் வெளிநாட்டு வர்த்தக கொள்கைகள் குறித்து பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் வர்த்தகத் துறையின் சர்வதேச வர்த்தக நிர்வாகத்தின் முதல் கொள்கை இயக்குநராக, அருண் வெங்கடராமன், இருந்துள்ளார். மேலும் நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சீனா, இந்தியா உள்ளிட்ட உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பதில்களை வடிவமைத்தவர் என வெள்ளை மாளிகையில் கூறப்பட்டது.
அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் நீதிபதி ஜேன் ஏ ரெஸ்டானிக்கு சட்ட எழுத்தராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார் அருண் வெங்கட்ராமன். மேலும் கொலம்பியாவில் உள்ள சட்டப் பள்ளியில் இருந்து ஜே.டி., பிளெட்சர் ஸ்கூல் ஆஃப் லா அண்ட் டிப்ளமோசியில் சட்டம் மற்றும் டிப்ளமோசி ஆகியவற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்ளும் அளவு பிற நாட்டில் தனது திறமையை நிரூபித்து உள்ளார்.