ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடக் கூடாது!! தொழிலதிபர்கள் வைத்த செக்! நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்!! 

0
223
Joe Biden should not contest the election!! Businessmen put a check! The problem of getting funds!!
ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடக் கூடாது!! தொழிலதிபர்கள் வைத்த செக்!! நிதி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல்!!
தற்பொழுது அமெரிக்காவின் அதிபராக இருக்கும் ஜோ பைடன் அவர்களை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் மீறி போட்டியிட்டால் நிதி கிடைக்காது என்றும் தொழிலதிபர்கள் செக் வைத்துள்ளனர். இதனால் ஜோ பைடன் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றது.
அமெரிக்கா நாட்டில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தற்பொழுது அதிபராக இருக்கும் ஜோ பைடன் அவர்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இரண்டு கட்சிகளை சேர்ந்தவர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று(ஜூலை14) அமெரிக்கா நாட்டில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பொழுது அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு காதில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கருத்து கணிப்புகளும் இந்த தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறுகின்றது. அதிலும் குறிப்பாக தற்பொழுது அதிபராக இருக்கும் ஜோ பைடன் மீது மக்களுக்கு உள்ள அதிருப்தி அதிகமாக தொடங்கியது. அது ஏன் என்றால் 81 வயதில் அதிபராக அமெரிக்கா நாட்டை வழிநடத்த ஜோ பைடன் அவர்கள் ஃபிட்டாக இல்லை என்பது தான்.
இவை மட்டுமில்லாமல் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கும் விவாதம் நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு 4 ஆண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்று கூறுவதற்கு அதிபர் ஜோ பைடன் தவறிவிட்டார். இந்த விவாதத்தில் அதிபர் ஜோ பைடன் அவர்கள் திக்கி திணறி பேசிக் கொண்டிருக்க டொனால்ட் டிரம்ப் அவர்கள் தைரிமாக பேசி ஆதிக்கம் செலுத்த விவாதத்தின் முடிவில் ஜோ பைடன் அவர்களின் இமேஜ் மொத்தமாக காலியானது. இதற்கு பிறகு அதிபர் ஜோ பைடன் அவர்களின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் மீது சொந்த கட்சியினரே நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளனர்.
தற்பொழுது வரை சிறந்த அதிபராக இருந்து வரும் ஜோ பைடன் அவர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிட்டால் வெற்றி பெறுவது மிகவும் கடினம் என்றும் அவர் இந்த தேர்தலில் விலக வேண்டும் என்றும் அவருக்கு பதிலாக வேறு யாராவது நிற்க வேண்டும் என்றும் ஜனநாயக கட்சியினர் கூறி வருகின்றனர்.
குறிப்பாக அதிபர் ஜோ பைடன் அவர்கள் இந்த தேர்தலில் வாபஸ் வாங்கி விட்டு அவருக்கு பதிலாக துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்கள் அதிபர் தேர்தலில் போட்டியிட்டால் டிரம்ப் அவர்களுக்கும் கமலா ஹாரிஷ் அவர்களுக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இவ்வாறு குழப்பங்கள் இருக்கும் பட்சத்தில் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தரும் தொழிலதிபர்கள் அனைவரும் இந்த தேர்தலில் அதிபர் ஜோ பைடன் அவர்கள் போட்டியிட்டால் நிதி தர மாட்டோம் என்று செக் வைக்கத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் நடைபெறும் பிரச்சாரங்களுக்கு அதிக செலவாகும். எனவே தேர்தலில் போட்டியிடக் நபர்கள் அனைவரும் நிதி வசூல் செய்து தான் பிரச்சாரம் செய்கிறார்கள். அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அவர்கள் மட்டும் நிதியை சார்ந்து இருக்காமல் தன்னுடைய செலவில் பிரச்சாரம் செய்கிறார்.
ஆனால் அதிபர் ஜோ பைடன் அவர்கள் அப்படி இல்லை. அதிபர் ஜோ பைடன் அவர்கள் தனக்கு கிடைக்கும் நிதியை மட்டுமே வைத்து பிரச்சாரம் செய்கிறார். ஆனால் தற்பொழுது ஜனநாயக கட்சிக்கு நிதி வேண்டும் என்றால் அதிபர் ஜோ பைடன் அவர்கள் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்று தொழிலதிபர்கள் தேர்தல் நிதியை முடக்கி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்தது.
இந்நிலையில் ஜனநாயக கட்சியின் ஆதரவு தொழிலதிபர்கள் முதல் கட்டமாக 90மில்லியன் அமெரிக்க டாலர் நிதியை முடக்கி வைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்திய மதிப்பில் 751 கோடி ரூபாய் ஆகும். இந்த தேர்தல் நிதி வேண்டும் என்றால் அதிபர் ஜோ பைடன் அவர்கள் தேர்தலில் இருந்து விலக வேண்டும் என்றும் தேர்தலில் இருந்து அதிபர் ஜோ பைடன் விலகவில்லை என்றால் முழு தேர்தல் நிதியையும் முடக்குவோம் என்றும் தொழிலதிபர்கள் கூறியுள்ளனர்.