Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

#image_title

மூட்டு வலி? 7 நாட்களில் குணமாக இதை செய்யுங்கள்!! நடக்கும் அதிசயத்தை நீங்களே பாருங்கள்!!

இன்றைய வாழ்க்கை முறையில் எலும்பு தொடர்பான பாதிப்பு சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. இதில் மூட்டுவலி தான் பெரும்பாலானோரை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. தாத்தா பாட்டி காலத்தில் வயதானவர்களை மட்டும் படுத்தி எடுத்து வந்த இந்த மூட்டு வலி தற்பொழுது சிறுவர்கள் முதல் இளம் வயதினர் என்று அனைவரையும் ஒரு பதம் பார்க்கும் நோயாக மாறி விட்டது.

இந்த மூட்டு வலியோடு மூட்டுகளில் எலும்பு தேய்மானமும் ஏற்பட தொடங்கி விடுவதால் எளிதான வேலைகள் கூட கடிமான ஒன்றாக மாறி விடுகிறது. இந்த பாதிப்பு ஏற்பட உடல் பருமன், முதுமை, எலும்புகளில் அடிபடுதல் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. இதை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சில நாட்களிலில் சரி செய்து விட முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

தேவையான பொருட்கள்:-

*இலவங்கம் – 3

*இஞ்சி – சிறு துண்டு

*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

*துளசி இலைகள் – 10

*தேன் – தேவையான அளவு
(அல்லது)
எலுமிச்சை சாறு

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரன் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் 3 இலவங்கம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், இடித்த இஞ்சி 1 தேக்கரண்டி அளவு மற்றும் 10 துளசி இலைகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

கலவை நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். பின்னர் அதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து பருகவும்.

இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூட்டு வலி பாதிப்பு முழுமையாக நீங்கி விடும்.

*இலவங்கத்தில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து இருக்கிறது. இவை மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை குறைக்க பெரிதும் உதவுகிறது.

*அதேபோல் அதிகளவு குர்குமின் கொண்ட மஞ்சள், ஒளிவிக் ஆசிட் கொண்ட துளசி மற்றும் ஆன்டி பயோடிக் பண்புகள் கொண்ட இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் மூட்டுகளின் இணைப்பில் ஏற்படும் வலிகளை விரைவில் குறைக்க முடியும்.

Exit mobile version