Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு சுள்ளுனு வலிக்குதா? அப்போ இந்த எண்ணெயை அங்கு தடவுங்கள்.. ஒரே நாளில் 100% குணமாகிடுவிங்க!!

இன்றைய காலத்தில் முதியவர்கள் மட்டுமின்றி இளம் வயதினர்,சிறு பிள்ளைகள் வரை மூட்டு வலி தொந்தரவை அதிகளவு சந்தித்து வருகின்றனர்.இந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெயை மூட்டு பகுதியில் அப்ளை செய்யுங்கள்.

மூட்டு வலிக்கான காரணங்கள்:

**வயது முதுமை
**உடல் பருமன்
**ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தல்
**மூட்டு பகுதியில் அடிபடுதல்
**எலும்பு தேய்மானம்
**மூட்டு பகுதி ஜவ்வு தேய்மானம்

மூட்டு வலி அறிகுறிகள்:

**நடப்பதில் சிரமம் ஏற்படுதல்
**மூட்டு வீங்குதல்
**கீல்வாதம்

மூட்டு வலியை குணப்படுத்தும் எண்ணெய் தயாரிப்பு முறை:-

தேவையான பொருட்கள்:-

1)கடுகு – ஒரு தேக்கரண்டி
2)கற்பூரம்(சூடம்) – ஒன்று
3)மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
4)கடுகு எண்ணெய் / நல்லெண்ணெய் – மூன்று தேக்கரண்டி
5)குப்பைமேனி இலை – சிறிதளவு

பயன்படுத்தும் முறை:-

**முதலில் ஒரு தேக்கரண்டி கடுகை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து ஒரு கற்பூரத்தை பொடித்து கடுகு தூள் உள்ள கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

**பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

**பிறகு இதை தாளிப்பு கரண்டி அல்லது சிறிய பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.

**அடுத்து இரண்டு தேக்கரண்டி கடுகு எண்ணெய் ஊற்றவும்.இந்த எண்ணெய் இல்லாதவர்கள் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.

**பிறகு சிறிதளவு குப்பைமேனி இலையை அதில் போட்டு கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.

**இந்த எண்ணெய் வெது வெதுப்பான சூட்டிற்கு வந்ததும் வடிகட்டி முழங்கால் மூட்டு பகுதியில் அப்ளை செய்தால் வீக்கம்,வலி குறையும்.

**அதேபோல் நல்லெண்ணெயில் பிரண்டை விழுது சேர்த்து கொதிக்க வைத்து தைலம் போல் மூட்டு பகுதியில் தடவி வந்தால் வலி குறையும்.

**நல்லெண்ணெயில் பூண்டு பற்களை போட்டு காய்ச்சி மூட்டு பகுதியில் அப்ளை செய்து வந்தால் முழங்கால் மூட்டு வலி முழுமையாக குணமாகும்.

Exit mobile version