மூட்டு தேய்மானம் மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான்!! இதில் தோசை செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!!

0
59
Joint wear and tear relieves joint pain and paralyzes!! If you make dosa in this, everyone will like to eat it!!
இன்று பெரியவர்கள் மட்டும் இல்லாமல் குழந்தைகளும் மூட்டு வலியால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.சிறு வயதிலேயே மூட்டு வலி ஏற்பட முக்கிய காரணம் எலும்பு தேய்மானம்,ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப் பழக்கம். இந்த மூட்டு வலி, மூட்டு தேய்மானம் சரியாக முடக்கத்தான் கீரையில் தோசை செய்து சாப்பிடுங்கள்.
முடக்கத்தான் கீரை தோசை செய்ய தேவைப்படும் பொருட்கள்:-
1)முடக்கத்தான் கீரை – ஒரு கப்
2)இஞ்சி – சிறிய துண்டு
3)பூண்டு – இரண்டு பற்கள்
4)பச்சை மிளகாய் – ஒன்று
5)மிளகு – பத்து
6)சீரகம் – 1/4 ஸ்பூன்
7)மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
8)தோசை மாவு – தேவையான அளவு
9)எண்ணெய் – தேவைக்கேற்ப
10)உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை:-
1.முதலில் ஒரு கப் முடக்கத்தான் கீரையை பாத்திரத்தில் கொட்டி தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு இதை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடுங்கள்.
2.பின்னர் ஒரு சிறிய துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக மிக்ஸி ஜாரில் சேர்க்கவும். அதேபோல் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி அதில் சேர்த்துக் கொள்ளவும்.
3.பிறகு பச்சை மிளகாய் ஒன்று,பத்து மிளகு,1.4 ஸ்பூன் சீரகம் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மைய்ய அரைத்துக் கொள்ளுங்கள்.
4.பிறகு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தோசை மாவு ஊற்றி அரைத்த முடக்கத்தான் பேஸ்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
5.பின்னர் அதில் 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கினால் முடக்கத்தான் தோசை மாவு தயார்.
6.பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடாக்கவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள முடக்கத்தான் கீரை மாவை ஊற்றி தோசை வார்க்கவும். தோசை மொரு மொருவென்று இருக்க நெய் அல்லது எண்ணெய் சேர்த்து சுடலாம்.
7.இந்த முடக்கத்தான் கீரை தோசைக்கு சைடிஸ் எதுவும் தேவைப்படாது. இந்த முறையில் முடக்கத்தான் கீரை செய்து சாப்பிட்டால் மூட்டு வலி,எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.