Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல ஹீரோவுக்கு அக்காவாகும் ஜோதிகா! எந்த படம் தெரியுமா?

கே.ஜி.எஃப் என்ற படத்தின் மூலம் மிக பிரபலமான இயக்குநர் என்ற பெயர் பெற்றவர் பிரசாந்த் நீல். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் ஜோதிகாவும் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

இதில் ஸ்ருதி ஹாசன் நடிகையாக பிரபாஸ்க்கு ஜோடியாகிறார். இதில் ஜோதிகா ஹீரோவின் சகோதரியாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கார்த்தி நடித்த தம்பி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார்.

 

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களை கவர்ந்த பிரபாஸ், தற்போது சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம், ஆகியப் படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

 

திருமணத்துக்குப் பிறகு சினிமா பக்கம் வராத ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினர். அதன் பிறகு தான் நடிக்கும் கதாபாத்திரங்களை மிக நேர்த்தியாக சேவை மனப்பான்மையோடு தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது சேவை மனப்பான்மை மிகவும் பாராட்டத்தக்கது

 

 

 

Exit mobile version