Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இப்படியெல்லாமா? சிவகுமார் செய்தார்? ஜோ கூறிய உண்மை!

#image_title

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தையே பதிக்க வைத்திருக்கிறார் ஜோதிகா. மிகவும் பிரபலமான சிவகுமாரின் மகனான சூர்யாவை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளன. பல எதிர்ப்புகளுக்குப் பிறகு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட ஜோதிகா சில வருடங்கள் திரையுலகத்திற்கு வராமல் இருந்தார்.

 

பின் செகண்ட் இன்னிங்ஸில் திரையுலகத்திற்கு வந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மறுபடியும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இப்பொழுது கதாபாத்திரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த நடித்து வருகிறார். அவர் நடிக்கும் படங்கள் மிகவும் நேர்த்தியாகவும் நடித்து வருகிறார்.

 

எப்படி அந்த வரிசையில் காதல் தி கோர் என்ற படம் மேலும் கேரளாவில் மிகப் பெரும் வரவேற்பை தந்துள்ளது என்று சொல்லலாம்.

 

மேலும் ஜோதிகா நடிப்பதற்கு சிவக்குமார் தடையாக இருக்கிறார் என்று வதந்திகள் பரவி வந்தன. இவரே மாபெரும் நடிகர் அப்படி தனது மருமகள் நடிப்பதை அவர் தடுப்பாரா? என்று அரசல் புரசல் கேள்விகள் எழுந்து வந்தன.

 

இதில் இன்னும் வேற இருவர்களுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாட்டில் காரணமாக ஜோதிகா மற்றும் சூரியா மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல்களும் பரவி வந்தன.

 

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் அவர் தந்த இன்டர்வியூவில் நடந்த உண்மையான சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

 

சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக மிகவும் சப்போர்ட் செய்தவரே சிவக்குமார் அவர்கள் தானாம். ஷூட்டிங் செல்லும் சமயத்தில்  குழந்தைகளை மறந்து நீ வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை அவர் கூறுவாராம்.  குழந்தைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வாராம்.

குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. கொரோனா கால சமயத்தில் ஜோதிகாவின் பெற்றோர்கள் அங்கு துன்பப்பட்ட காரணத்தால் சூர்யாவிடம் எடுத்து கூறி அங்கு சில நாட்கள் தங்கி இருக்கிறார்கள். இதுதான் காரணமே தவிர பிரிந்து ஏதும் செய்யவில்லை. யாரும் போகவில்லை என் அவர் தடாலடியான பதில்களை தந்துள்ளார்.

Exit mobile version