ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் மற்றும் பாடலாசிரியர் என தமிழ் சினிமா துறையில் பன்முகங்களைக் கொண்ட விக்னேஷ் சிவன் அவர்களுக்கும் உலக அளவில் தனக்கென தனி ரசிகர் படையை கொண்டுள்ள அஜித்குமார் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபத்தின் காரணமாக ஏகே 62 என்ற திரைப்படத்தினை விட்டு விக்னேஷ் சிவன் அவர்கள் விலகி இருந்தார்.
இதற்கான காரணம் குறித்தும் இவர்களுக்கு இடையே நிகழ்ந்த பிரச்சினை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் சுபைர்.
விக்னேஷ் சிவன் மற்றும் அஜித்தின் உடைய பிரச்சனை குறித்து சுபைர் பேசியிருப்பதாவது :-
லண்டனில் வைத்துதான் அஜித்திடம் விக்னேஷ் சிவன் கதை சொன்னார். அப்போது கதையில் சில மாற்றங்களை அஜித் சொன்னார். ஆனால் விக்னேஷ் சிவனுக்கு அதில் உடன்பாடில்லை. அதனையடுத்து அஜித்துக்கே தெரியாமல் லைகா நிறுவனத்திடம் சென்று கதையை கூறினார். அது அஜித் காதுக்கு வந்தது. தனக்கு தெரியாமல் விக்னேஷ் சிவன் லைகாவுக்கு போய்விட்டாரே என்ற டென்ஷன் அஜித்துக்கு வந்துவிட்டது. அதனையடுத்துதான் படத்திலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்” என்றும் பிரபல பத்திரிகையாளர் தெரிவித்திருக்கிறார்.
போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன் அவர்கள். திரைப்படம் பெரியளவும் ரசிகர்கள் இடையில் வெற்றி காணாத நிலையில் அதன் பின் நானும் ரவுடிதான் திரைப்படத்தின் மூலம் திரையுலகிலும் தன்னுடைய தனிப்பட்ட வாழ்விலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவரது குடும்ப வாழ்க்கை நன்றாக அமைந்துள்ள நிலையில் சினிமா துறையில் இவரது வாழ்க்கை சற்று கேள்விக்குறியாகவே தற்பொழுது இருந்து வருகிறது.
இந்நிலையில் தான், அஜித்தின் 62ஆவது படத்தை இயக்குவதாக இருந்த விக்னேஷ் சிவன் அதிலிருந்து வெளியேறி; இப்போது எல்ஐகே என்ற படத்தை இயக்கிவருகிறார். முதலில் அந்தப் படத்துக்கு எல்ஐசி என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.