Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் திமுக,அதிமுகவினர்!! சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!!

Judge Velmurugan of the Madras High Court condemned that both the DMK and AIADMK parties do not care about the people

Judge Velmurugan of the Madras High Court condemned that both the DMK and AIADMK parties do not care about the people

dmk-admk:திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை  என கண்டனம் தெரிவித்துள்ளார்  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன்.

தமிழகத்தில் அதிமுக , திமுக என இரண்டு கட்சிகளும் ஏறத்தாழ 50 வருடங்கள் ஆட்சி செய்து இருக்கிறது.இந்த இரண்டு கட்சிகளும் தங்களுக்குள்ள  மாறி மாறி வழக்குகளை தொடர்ந்து வருகிறது. இவ்வாறாக இரு கட்சிகளும் மாறி மாறி வழக்கு தொடர்ந்தால் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக OPS அணி , EPS அணி என இரண்டு அணிகளாக பிரிந்தது.  இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில்
பனிப்போர் நடந்து வருகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி  OPS அணியினர் கட்சி ஆவணங்களை எடுத்து சென்றதாக OPS தரப்பு மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 300க்கும் மேற்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளார் கள். இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் முன் ஜாமீன் வாங்கி இருக்கிறார்கள். இந்த வழக்கு தொடர்பான 114 ஆவணங்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மக்கள் மீது அக்கறை இல்லை. இரண்டு கட்சிகளும் மாறி மாறி வழக்கு தொடர்ந்தால் மற்ற வழக்குகளை விசாரிப்பது எப்போது என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும்  கடந்த 2000 ஆம் ஆண்டு  தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவம் மறந்து போய்விட்டது? என கேள்வி  தனது எதிர்ப்பை தெரிவித்தார். 2000ஆம் ஆண்டு   ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜெயலலிதா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார்கள்.

அந்த போராட்டத்தின் உச்சமாக தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டது. இதில் பஸ்ஸில் இருந்த  மூன்று கல்லூரி மாணவிகளை உயிரோடு எரித்து கொல்லப்பட்டார்கள். இச் சம்பவம்  அப்போது  தமிழகத்தை உலுக்கியது.

Exit mobile version