சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க!

0
236
Tamil Nadu Department of School Education

சளி பிடிக்காது! 10 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த ஜூஸ் குடிங்க!

நெல்லிக்காய் ஜூஸை குடித்தால் சளி பிடிக்கும் என்று யாரும் அதை குடிப்பதில்லை. ஆனால் நெல்லிக்காய் ஜூஸை குடித்து வரும் பொழுது பத்து மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

சைனஸ் ஆஸ்துமா என இருக்கும் நோயாளிகள் கூட இந்த ஜூசை குடித்து வரும் பொழுது சளி பிடிக்காமல் பத்து மடங்கு உங்களது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

அதை எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

1. 2 பெரிய நெல்லிக்காய்
2. இஞ்சி 1 துண்டு
3. பச்சை மிளகாய் 1/2
4. புதினா இலை 1/2 கை பிடி
5. எலுமிச்சை சாறு
6. உப்பு

செய்முறை:

1. முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும்.
2. தோலை நீக்கி நெல்லிக்காய் இரண்டையும் சிறு சிறு துண்டுகளாக அறுத்து போட்டுக் கொள்ளுங்கள்.
3. ஒரு பச்சை மிளகாயை எடுத்து அதில் அரை துண்டு பச்சை மிளகாயை மட்டும் அறுத்து போட்டுக் கொள்ளவும்.
4. புதினா இலைகளை அரை கைப்பிடி அளவு எடுத்து போட்டுக் கொள்ளவும்.
5. ஒரு துண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ளவும்.
6. அரை டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ளவும்.
7. இப்பொழுது வடிகட்டி டம்ளரில் ஊற்றி கொள்ளவும்.
8. இப்பொழுது ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்து அதில் அரை எலுமிச்சை பழத்தை மட்டும் பிழிந்து நெல்லிக்காய் சாற்றுடன் கலந்து கொள்ளவும்.
9. இப்பொழுது ஒரு டம்ளர் முழுவதையும் நிரம்புமாறு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.
10. சுவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
11. அவ்வளவுதான் நெல்லிக்காய் ஜூஸ் ரெடி.

வாரத்தில் மூன்று முறை இதனை தயார் செய்து நீங்கள் குடித்து வரும்பொழுது உங்களது நோய் எதிர்ப்பு சக்தி 10 மடங்கு அதிகரிக்கும்.